பிளஸ் டூ பொதுத்தேர்வில் 91.1 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி: தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்

பிளஸ் டூ பொதுத்தேர்வில் 91.1 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.
பிளஸ் டூ பொதுத்தேர்வில் 91.1 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி: தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் பிளஸ்2 தேர்வு மார்ச் 1ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6ந் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவமாணவிகள் தேர்வு எழுதினார்கள். அவர்களில் மாணவிகள் 4 லட்சத்து 63 ஆயிரத்து 758 பேர். மாணவர்கள் 4 லட்சத்து 3 ஆயிரத்து 176 பேர். வழக்கம் போல மாணவிகள் தான் அதிகம். தனி தேர்வர்கள் 40 ஆயிரத்து 686 பேர்.அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 ஆயிரத்து 942 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

தனி தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினார்கள். விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து, மதிப்பெண்கள் கம்ப்யூட்டர் மூலம் சான்றிதழில் பதிவு செய்யும் பணி நடந்தது. மீண்டும் மதிப்பெண்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இப்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன. இன்று (புதன் கிழமை) பிளஸ்2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் கேஏ செங்கோட்டையன், மணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதம் பற்றிய தகவலை வெளியிட்டார். அதன் விவரங்களை கீழ் காணலாம்

* தமிழகம், புதுவையில் பிளஸ் டு பொதுத்தேர்வில் 91.1 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

* மணவிகள் 94.1 சதவீதம், மாணவர்கள் 87.7 சதவீதம்

* வழக்கம் போல் மாணவிகளே தேர்ச்சி விகிதம் அதிகம் பெற்றுள்ளனர்

* கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

* 97 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.

* 96.3 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடம்,

* 96.1 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் திருப்பூர் மாவட்டம் மூன்றாவது இடம்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com