பிளஸ்-2 துணைத்தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் நாளை வெளியீடு

பிளஸ்-2 துணைத்தேர்வு முடிவு, மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் நாளை காலை வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
பிளஸ்-2 துணைத்தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் நாளை வெளியீடு
Published on

சென்னை,

அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் ஆகஸ்ட் 2021 நடைபெற்ற 12-ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவு, மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படப்படுகிறது.

மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுள் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது தேர்வெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 22.10.2021 அன்று முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.இப்பட்டியலில் இடம்பெறாத தேர்வெண்களுக்குரிய தேர்வர்களின் விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும் மேற்காண் இணையதளத்தில் தங்களது தேர்வு எண் (ரோல் நம்பர்) மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை உடனே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com