எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் இப்போது தேவையில்லை: தொல் திருமாவளவன்

பிரதமர் வேட்பாளர் இப்போது தேவையில்லை. முதலில் இந்தக் கூட்டணியை உருவாக்கி வலுவாக்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் இப்போது தேவையில்லை: தொல் திருமாவளவன்
Published on

பெங்களூரு,

பெங்களூரில் இன்று எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நேற்றும் ஆலோசனை நடந்த நிலையில், இன்று 2-வது நாளாக கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 26 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன. காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனும் இந்தக் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருமாவளவன் கூறியதாவது:

பாஜக சிதறிப்போன கூட்டணியை ஒட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. என்.டி.ஏ கூட்டணி பெயரளவில் தான் உள்ளது. 10 ஆண்டுகளில் ஒரு இடத்தில் கூட என்.டி.ஏ என்ற பெயரில் கூட்டத்தை கூட்டியதே இல்லை.

ஆகவே மறுபடியும் உயிரூட்டுவதற்கான முயற்சியாகத்தான் டெல்லியில் இந்தக் கூட்டத்தை கூட்டியிருப்பதாகத்தன் நான் கருதுகிறேன். பொது சிவில் சட்டத்தை வரும் கூட்டத்தொடரில் பாஜக அறிமுகம் செய்தால் ஒருங்கிணைந்து அதை எதிர்க்க வேண்டும் என்ற கருத்தை நாங்கள் முன்மொழிந்து இருக்கிறோம். பிரதமர் வேட்பாளர் இப்போது தேவையில்லை. முதலில் இந்தக் கூட்டணியை உருவாக்கி வலுவாக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com