

சென்னை,
காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் தம்பதிக்கு கடிதம் மூலம் பிரதமர் மோடி திருமண வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளான காவியா மாறனுக்கு கடந்த நவம்பர் 11-ஆம் தேதி கிரீசில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்த பிரம்மாண்ட திருமண விழாவில் ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின், தயாநிதி மாறன் மற்றும் மாறன் குடும்பத்தினர் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதை தொடர்ந்து, இன்று (சனிக்கிழமை) சென்னையில் மணமக்களுக்கு பிரம்மாண்டமான முறையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிலையில், காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் தம்பதிக்கு கடிதம் மூலம் பிரதமர் மோடி திருமண வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
காவேரி மற்றும் கலாநிதி மாறன் ஜி,
காவியா மற்றும் அனிருத் அவர்கள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் பயணத்தை தொடங்கும் இந்த மங்களகரமான திருமண நாளில், அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தம்பதியினர் ஒவ்வொரு நாளும் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பையும் பாசத்தையும் வளர்த்துக் கொள்ளட்டும். அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்து, குடும்பத்திற்கு முன்னேற்றத்தைக் கொண்டு வரட்டும்.
2026, நவம்பர் 21ம் தேதி அன்று நடைபெற உள்ள திருமண விழாக்களுக்கு என்னை அழைத்தமைக்கு மனமார்ந்த நன்றிகள். இந்த மகத்தான தருணத்தில் எனது வாழ்த்துகளையும் நல்வாழ்த்துக்களையும் மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.