பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து ஏ.என்.எஸ்.பிரசாத் நீக்கம் - நயினார் நாகேந்திரன் அறிவிப்பு

ஊடகத்துறை பொறுப்பாளர் பொறுப்பில் இருந்தும் ஏ.என்.எஸ்.பிரசாத் விடுவிக்கப்படுவதாக நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து ஏ.என்.எஸ்.பிரசாத் நீக்கம் - நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழக பா.ஜனதா மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக பா.ஜனதா மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் இன்று முதல் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். மேலும், சட்டசபை தேர்தல் மாநில பணிக்குழுவில் அவருக்கு அளிக்கப்பட்ட ஊடகத்துறை பொறுப்பாளர் என்ற பொறுப்பில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகிறார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க. தலைவர் விஜய் இணைய வேண்டும் என ஏ.என்.எஸ்.பிரசாத் அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com