பிரதமர் மோடி பிறந்த நாள்: மத்திய இணை மந்திரி எல்.முருகன் வாழ்த்து

பாரதத்தாய் கண்ட வலிமை மிக்க பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களை வாழ்த்துவோம் கொண்டாடுவோம் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்
பிரதமர் மோடி பிறந்த நாள்: மத்திய இணை மந்திரி எல்.முருகன் வாழ்த்து
Published on

சென்னை,

பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான நரேந்திரமோடி இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பாஜக தலைவர்கள், காங்கிரஸ் தலைவர்கள், அரசியல் கட்சியினர், தொண்டர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "மக்கள் நலன் விரும்பும் மாபெரும் தலைவர், சர்வதேசம் போற்றும் சமூக நீதி காவலர், புதிய இந்தியாவின் சிற்பி, பாரத அன்னையின் தவப்புதல்வன் "பார் போற்றும் உன்னத தலைவர்" பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பாக பணிவு மிகுந்த பிறந்தநாள் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லோருக்கும் சம வாய்ப்பு நாட்டின் வளர்ச்சியையே தன் இதய துடிப்பாக கொண்டிருக்கும் உன்னதத் தலைவர்..! ஒரு நாட்டின் பிரதமர் தன் நாட்டுக்கு மட்டும் பிரதமராக இல்லாமல் உலக தலைவர்கள் போற்றும் அகிம்சை வழி தலைவராக பாரதத்தாய் கண்ட வலிமை மிக்க பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களின் 73-வது பிறந்தநாளில் அவரை வாழ்த்துவோம் கொண்டாடுவோம். பாரதப் பிரதமர் அவர்கள் நீண்ட ஆயுளுடனும், பூரண நலத்துடனும் வாழ்ந்து, பாரத தேசத்தை வழிநடத்திச் செல்ல எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்." என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com