பாமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: பெரம்பூரில் திலகபாமா போட்டி, சவுமியாவுக்கும் சீட்

பெரம்பூரில் தவெக தலைவர் விஜய்யை எதிர்த்து பாமக சார்பில் திலகபாமா போட்டியிடுகிறார்.

பாமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: பெரம்பூரில் திலகபாமா போட்டி, சவுமியாவுக்கும் சீட்
Published on

சென்னை,

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவிற்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் முதல் கட்டமாக 3 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. மீதமுள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று அன்புமணி வெளியிட்டார்.இதன் விவரம் வருமாறு:

பெரம்பூர்: திலகபாமா (இந்த தொகுதியில் தவெக சார்பில் விஜய் போட்டி)

தருமபுரி : சௌமியா அன்புமணி

விருத்தாசலம்: தமிழரசி ஆதிமூலம்,

சேலம் மேற்கு: மு.கார்த்தி

பென்னாகரம்: பாடி வெ. செல்வம்

போளூர்: சி.ஆர். பாஸ்கரன்

திருப்போரூர்: கே.பாலு,

ஜெயங்கொண்டம் : வைத்தி

சேலம் வடக்கு: எஸ். சதாசிவம்

விக்கிரவாண்டி: சி. சிவக்குமார், எம்.ஏ அவர்கள்

சோளிங்கர்: க. சரவணன்,

மயிலாடுதுறை : சித்தமல்லி

உத்திரமேரூர்: பெ. மகேஷ்குமார்,

ரிஷிவந்தியம்: அ.ப. செழியன் அவர்கள்

காட்டுமன்னார் கோயில் (தனி): அன்பு. சோழன்,

முன்னதாக பாமக முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் 3 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன் விவரம் வருமாறு: கீழ்வேளூர் - ச.வடிவேல் ராவணன் (பாமக பொதுச் செயலாளர்), அம்பத்தூர் - என்.சேகர் (மாநில துணைத் தலைவர் - முன்னாள் நகர் மன்றத் தலைவர்), செஞ்சி - அ.கணேஷ் குமார் (இளைஞரணி தலைவர் - முன்னாள் எம்எல்ஏ) ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிட உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com