முழுஅடைப்பு போராட்டம் எதிரொலி:முன்னெச்சரிக்கையாக பா.ம.க.வினர் 252 பேர் கைது

முழுஅடைப்பு போராட்டம் காரணமாக முன்னெச்சரிக்கையாக பா.ம.க.வினர் 252 பேர் கைது செய்யப்பட்டனா.
முழுஅடைப்பு போராட்டம் எதிரொலி:முன்னெச்சரிக்கையாக பா.ம.க.வினர் 252 பேர் கைது
Published on

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் நேற்று முழுகடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பா.ம.க.வினர் 55 பேரை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.

மேலும் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, மந்தாரக்குப்பம், வடலூர், சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொது இடங்களில் நேற்று காலை ஒன்று திரண்டது மற்றும் கடைகளை அடைக்குமாறு வற்புறுத்தியது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக கூறி பா.ம.க.வினர் 197 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர். இதன் மூலம் மாவட்டம் முழுவதும் பா.ம.க.வினர் 252 பேர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com