

சென்னை,
தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளன. இதனை முன்னிட்டு பல்வேறு கட்சிகளும் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதில், அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பா.ம.க. அணி, அ.தி.மு.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது.
இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாணவரணி பொதுக்குழு கூட்டம் நாளை (பிப்ரவரி 16-ந்தேதி) திங்கள் கிழமை காலை 10 மணிக்கு சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள அருள் முருகன் டவர்ஸ் அரங்கத்தில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளார்.