பிரதமர் வருகை: திருச்சியில் நாளை டிரோன்கள் பறக்க தடை

பல்வேறு வருகை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை திருச்சி வருகிறார்.
பிரதமர் வருகை: திருச்சியில் நாளை டிரோன்கள் பறக்க தடை
Published on

திருச்சி,

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, திருச்சியில் நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;

“பாரத பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு வருகை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி நாளை (11.03.2026) முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. எனவே நாளை (11.03.2026) முழுவதும் தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com