16 வயது சிறுமி பலாத்காரம்; தொழிலாளி கைது

16 வயது சிறுமி பலாத்காரம்; தொழிலாளி கைது
16 வயது சிறுமி பலாத்காரம்; தொழிலாளி கைது
Published on

கடத்தூர்

திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா திருமுருகன்பூண்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் ரஞ்சித்குமார் (வயது 22). கூலி தொழிலாளி. இவருக்கும் கோபி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இன்ஸ்ட்ராகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 3 மாதமாக இருவரும் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.

இந்தநிலையில் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் தந்தை கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமாரை கைது செய்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com