போக்சோ வழக்கு குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

சுத்தமல்லியை சேர்ந்த வாலிபர் போக்சோ வழக்கு குற்றவாளி ஆவார்.
போக்சோ வழக்கு குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியை சேர்ந்த இசக்கி என்பவரின் மகன் மாரிமுத்து (வயது 34) போக்சோ வழக்கு குற்றவாளி ஆவார். இவர் மீது சேரன்மகாதேவி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில், மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், நேற்று (12.6.2025) மாரிமுத்து குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com