சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு

உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக சிறுமி சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது24). இவர் 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். அந்த சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து ஓமலூர் அனைத்து மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி விசாரணை நடத்தினார். அப்போது விஜய், சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து விஜய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com