

சென்னை,
போக்சோ வழக்கில் சிறுமி ஒருவரின் புகைப்படம் மற்றும் காணொளி பகிரப்படுவது சட்ட பிரிவு 23(2)-ன் கீழ் குற்றமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
🚨 போக்சோ வழக்கு தொடர்பாக பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு 🗣️
🛡️ சென்னை பெருநகர காவல்துறை, போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் தொடர்பான ஒரு முக்கிய வழக்கை விசாரித்து வருகிறது. இதில், சிறுமி ஒருவரின் புகைப்படம் அல்லது காணொளி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
⚠️ சிறுமி ஒருவரின் இத்தகைய புகைப்படங்களைப பகிர்வது ஒரு குற்றமாகும். அத்தகைய புகைப்படங்களை வெளியிடுவது போக்சோ (POCSO) சட்ட பிரிவு 23(2)-ன் கீழ் குற்றமாகக் கருதப்படுகிறது. எனவே, இது தொடர்பான தகவல்களைப் பொதுவெளியில் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
📢 இவ்வழக்கு தொடர்பான ஆதாரங்கள் ஏதேனும் இருப்பின், அவற்றை பெருநகர சென்னை காவல்துறையிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.