தூத்துக்குடியில் போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 23 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
Published on

தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மாப்பிள்ளையூரணி பகுதியைச் சேர்ந்த சபரி மகன் இசக்கிமுத்து (வயது 55) என்பவரை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பீரித்தா இன்று குற்றவாளி இசக்கிமுத்துக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும் மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த நீதிமன்ற தலைமை காவலர் ரபிலாகுமாரி ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார். இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 23 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com