கள்ளக்குறிச்சியில் போக்சோ வழக்கு குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது - கலெக்டர் நடவடிக்கை

போக்சோ வழக்கு குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் போக்சோ வழக்கு குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது - கலெக்டர் நடவடிக்கை
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட புகாரில் சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பன் மகன் ராமு (47) என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட ராமுவின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், அவரை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் பத்மஜா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com