17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் மீது போக்சோ வழக்கு

17 வயது சிறுமிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் 17 வயது மகள் ஒரு கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்தார். இதற்கிடையே ஊட்டியில் 17 வயது சிறுமி 11-ம் வகுப்பு படித்த போது, அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் தங்கள் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு நீண்ட நாட்களாக செல்போனில் பேசி வந்தனர். இந்தநிலையில் சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கு சென்ற சிறுவன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளான்.
இந்த நிலையில் சிறுமிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சிறுமியை பெற்றோர் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதித்தனர். அப்போது சிறுமி 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுகுறித்து ஊட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் போலீஸ் துணை சூப்பரண்டு நவீன், இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையிலான போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






