அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது போக்சோ புகார்கள் பதிவு செய்யப்பட்டால் 4 நாட்களுக்குள் இடைநீக்கம்- பள்ளிக்கல்வித்துறை

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஒரு முதற்கட்ட விசாரணையை மேற்கொள்வார்
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது போக்சோ புகார்கள் பதிவு செய்யப்பட்டால் 4 நாட்களுக்குள் இடைநீக்கம்- பள்ளிக்கல்வித்துறை
Published on

சென்னை,

தமிழ்நாட்டில், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் மீது போக்சோ புகார்கள் பதிவு |செய்யப்பட்டால் அவர்கள் 4 நாட்களுக்குள் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இப்புகார்கள் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (DCPO) ஒரு முதற்கட்ட விசாரணையை மேற்கொள்வார் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இது காவல்துறையினர் மேற்கொள்ளும் சட்ட விசாரணைக்கு இணையாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com