2 சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த போக்சோ குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் 10 மற்றும் 11 வயது சிறுமிகள் 2 பேரை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
2 சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த போக்சோ குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை
Published on

தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024ம் ஆண்டு 10 மற்றும் 11 வயது சிறுமிகள் 2 பேரை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த சகாயம் மகன் கெவின் (வயது 38) என்பவரை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா இன்று குற்றவாளி கெவின் என்பவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.13,500 அபராதம் விதித்தும், மேலும் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளுக்கும் அரசு நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் 4 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் ஜானகி, விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் ரபிலாகுமாரி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 29 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com