திருச்சி அரசு மருத்துவமனையில் போக்சோ கைதி சாவு

திருச்சி அரசு மருத்துவமனையில் போக்சோ கைதி இறந்தார்.
திருச்சி அரசு மருத்துவமனையில் போக்சோ கைதி சாவு
Published on

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பாலநகர் கே.ஆர்.எஸ். வீதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 65). இவர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2021-ஆண்டு அக்டோபர் மாதம் முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமச்சந்திரனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே சிறை அதிகாரிகள் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ராமச்சந்திரன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார். இதுகுறித்து சிறை அதிகாரி கண்ணன் கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com