போக்சோ கைதி திடீர் சாவு

போக்சோ கைதி திடீர் சாவு
போக்சோ கைதி திடீர் சாவு
Published on

கோவை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் குப்பாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் குருசாமி (வயது 44). இவரை கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி போக்சோ வழக்கில் பவானி அனைத்து மகளிர் போலீசார் கைதுசெய்தனர். பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவரை சிறைத்துறை காவலர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவர் மாரடைப்பு காரணமாக இறந்ததாக தெரியவந்தது. இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com