கரூரை சேர்ந்த போக்சோ கைதி சாவு

கரூரை சேர்ந்த போக்சோ கைதி உயிரிழந்தார்.
கரூரை சேர்ந்த போக்சோ கைதி சாவு
Published on

கே.கே.நகர்:

கரூர் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 30). போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற இவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் கடந்த 8-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில் நேற்று மதியம் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com