பள்ளி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள்; 27-ந் தேதி நடக்கிறது

பள்ளி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் 27-ந் தேதி நடக்கிறது.
பள்ளி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள்; 27-ந் தேதி நடக்கிறது
Published on

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 11, 12-ம் வகுப்பு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வருகிற 27-ந் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் நடைபெறும் இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பம் மற்றும் விதிமுறைகள் முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் அனுப்பி வைக்கப்படும். போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் தங்கள் பள்ளியின் தலைமை அசிரியரை அணுகி விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து தலைமை ஆசிரியரின் கையொப்பம் பெற்று பள்ளி அல்லது முதன்மைக் கல்வி அலுவலகம் மூலமாக adtamilariyalur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். போட்டி நடைபெறும் நாளன்று அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணிக்கு வருகை புரிந்து போட்டிகளில் கலந்து கொள்வதற்கான வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட வேண்டும். ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் 3 போட்டிக்கும் மூன்று மாணவர்கள் மட்டும் ஒரு பள்ளியில் இருந்து அனுப்பி வைக்கும்படி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். போட்டியில் முதல் பரிசு பெற்றவர்கள் மட்டும் மாநில அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். மாநில போட்டிகள் தொடர்பான தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும். இந்த வாய்ப்பினைக் பள்ளியில் பயிலும் 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com