கள்ளக்குறிச்சி அருகே விஷ வண்டு கடித்து விவசாயி சாவு

கள்ளக்குறிச்சி அருகே விஷ வண்டு குடித்து விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி அருகே விஷ வண்டு கடித்து விவசாயி சாவு
Published on

கள்ளக்குறிச்சி அருகே தண்டலை கிராமத்தை சேர்ந்தவர் துரைக்கண்ணு (வயது 71), விவசாயி. இவர் தனது விவசாய நிலத்தில் உள்ள வாழைத்தாரை வெட்டினார். அப்போது அங்கிருந்த 30-க்கும் மேற்பட்ட விஷவண்டுகள், அவரை விரட்டி, விரட்டி கடித்தன. இதில் பலத்த காயமடைந்த துரைக்கண்ணுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி துரைக்கண்ணு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com