பொதுமக்களை அச்சுறுத்தும் விஷவண்டுகள்

திருவாரூர் அருகே பெருந்தரக்குடியில் பொதுமக்களை அச்சுறுத்தும் விஷவண்டுகளை விரைவில் தீ வைத்து அழிக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்களை அச்சுறுத்தும் விஷவண்டுகள்
Published on

திருவாரூர்;

திருவாரூர் அருகே பெருந்தரக்குடி ஊராட்சியில் மாரியம்மன் கோவில் தெரு செல்லும் வழியில் தட்டான் குளம் அமைந்துள்ளது. இந்த தட்டான்குளம் அருகில் சுமார் 50 குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியை சேர்ந்த பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் உள்பட பலர் இந்த சாலை வழியாக சென்று வருகிறார்கள். இந்த சாலையோரத்தில் உள்ள புளிய மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டி உள்ளன.இந்த கூட்டில் உள்ள நூற்றுகணக்கான விஷவண்டுகள் அடிக்கடி பறந்து வெளியே வந்து மக்களை கடித்து அச்சுறுத்தி வருகிறது. எனவே உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள விஷ வண்டுகளை தீ வைத்து அழிக்க வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com