சென்னையில் முககவசம் அணியாதவர்கள் மீது போலீசார் தீவிர நடவடிக்கை;ரூ.17¾ லட்சம் அபராதம் வசூல்

கொரோனா தொற்றின் 2-வது அலையில் இருந்து தன்னையும், பிறரையும் பாதுகாக்க முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது மிக முக்கிய கடமையாக பார்க்கப்படுகிறது.
சென்னையில் முககவசம் அணியாதவர்கள் மீது போலீசார் தீவிர நடவடிக்கை;ரூ.17¾ லட்சம் அபராதம் வசூல்
Published on

எனினும் சிலர் முககவசம் அணியாமல் அலட்சியமாக சாலையில் வலம் வருகிறார்கள். இந்தநிலையில் சென்னையில் முககவசம் அணியாதவர்கள் மீது மாநகராட்சி சார்பில் அபராத நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று போலீசாரும் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு முககவசம் அணியாதவர்களை மடக்கி பிடித்து வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதித்து வருகின்றனர்.

அந்தவகையில் போலீசார் சார்பில் கடந்த 8-ந்தேதி முதல் நேற்றுமுன்தினம் வரையில் சென்னையில் முககவசம் அணியாமல் வந்த 8 ஆயிரத்து 901 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து அபராத தொகையாக ரூ.17 லட்சத்து 80 ஆயிரத்து 200 வசூலிக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியை கடைபிடிக்காத 95 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.42 ஆயிரத்து 100 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com