பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்கலாம் - சிபிசிஐடி உதவி எண் அறிவிப்பு

பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என சிபிசிஐடி போலீஸ் உதவி எண் அறிவித்துள்ளது.
பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்கலாம் - சிபிசிஐடி உதவி எண் அறிவிப்பு
Published on

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவங்கள் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை வெளியுலகிற்கு கொண்டுவந்த பெண்ணின் அடையாளத்தை போலீஸ் எஸ்.பி. வெளியிட்டது விமர்சனத்துக்கு உள்ளானது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இவ்விவகரத்தில் வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. அதனை பரப்ப வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்படுகிறது.

வீடியோக்கள் பாதிக்கப்பட்டவர்கள் புகாரை தெரிவிக்க கூடாது என மிரட்டும் வகையில் வெளியிடப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என சிபிசிஐடி போலீஸ் உதவி எண் அறிவித்துள்ளது. பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் படங்கள் வீடியோக்கள் தொடர்பாக 9488442993 என்ற எண்ணுக்கும், cbcidcbecity@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல்களை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அளிப்பவர்களின் விபரம் ரகசியம் காக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கில் எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நேரிட்டவை மற்றும் தெரிந்த தகவல்களை தெரிவிக்கலாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com