

ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள அக்கொண்டப்பள்ளியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 20). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரும், 16 வயதுடைய சிறுமி ஒருவரும் உறவினர்கள் ஆவார்கள். அந்த சிறுமி 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், வாலிபர் சிதம்பரம் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, உல்லாசமாக இருந்துள்ளார். இதில், சிறுமி கர்ப்பமானார். தற்போது அந்த சிறுமி 2 மாத கர்ப்பிணியாக உள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி வழக்குப்பதிவு செய்து சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை வலைவீசி தேடி வருகிறார். அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.