சிறுவன் கொலை வழக்கில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை

சிறுவன் கொலை வழக்கில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவன் கொலை வழக்கில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை
Published on

பெரம்பலூர் இந்திரா நகரை சோந்த கணேசனின் மகன் ரோஹித் ராஜை (வயது 14) நேற்று முன்தினம் இரவு மர்ம கும்பல் மது பாட்டிலால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடியது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் நேற்று 5 பேரை பிடித்தனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com