விபத்துகளை தடுக்க போலீசார் விழிப்புணர்வு

உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் விபத்துகளை தடுக்க போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விபத்துகளை தடுக்க போலீசார் விழிப்புணர்வு
Published on

உத்தமபாளையத்தில் இருந்து கம்பம் செல்வதற்கு கோகிலாபுரம் விலக்கு வழியாக புதிய பைபாஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் மட்டும் பைபாஸ் சாலையில் கோகிலாபுரம் விலக்கு, அனுமந்தன்பட்டி ரவுண்டானா ஆகிய பகுதிகளில் நடந்த தொடர் விபத்துகளில் இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் தொடர் விபத்தை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா உத்தரவின்பேரில், உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் சிலைமணி, கம்பம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தாமரை கண்ணன் மற்றும் போலீசார் கோகிலாபுரம் விலக்கு, அனுமந்தன்பட்டி ரவுண்டானா பகுதிகளில் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் பைபாஸ் சாலையில் வாகனங்களை ஓட்டி செல்லும் போது சாலை விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். சாலையில் வாகன ஓட்டிகள் எளிதாக சென்று வருவதற்கு அம்புக்குறிகள் இடப்பட்டுள்ளது. வாகனங்கள் இடையே முந்திச் செல்வதை தவிர்க்க வேண்டும். ரோட்டை கடக்கும்போது எப்படி செல்லவேண்டும். எந்தெந்த வழித்தடத்தில் செல்ல வேண்டும் என்பது குறித்தும் போலீசார் விளக்கி கூறினர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com