பிரபல யூடியூபர் விஜே சித்து மீது போலீசில் புகார்

பிரபல யூடியூபர் விஜே சித்து போக்குவரத்து விதிகளை மதிக்காமல் வாகனத்தை ஓட்டியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரபல யூடியூபர் விஜே சித்து மீது போலீசில் புகார்
Published on

சென்னை,

பிரபல யூடியூபர் விஜே சித்துவுக்கு எதிராக சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அலுவலகத்தில் சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ஷெரின் என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், விஜே சித்து போக்குவரத்து விதிகளை மதிக்காமலும் அஜாக்கிரதையாகவும், செல்போனில் பேசியபடியும் வாகனத்தை இயக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், வீடியோவில் ஆபாச வார்த்தைகள், இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெற்றுள்ளதாகவும், இதுதொடர்பான வீடியோ யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதனை பார்த்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தவறான வழியில் செல்ல வழிவகுக்கும். போக்குவரத்து விதிகளை மீறிய விஜே சித்து மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விளக்கமளித்துள்ள சென்னை போலீசார், "குறிப்பிடப்பட்டுள்ள வீடியோ கடந்த 12.11.2023 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பதிவினை ஆராய்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com