

சென்னை,
மதுரை செக்கானூரணி காவல்நிலைய கழிவறையில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் உண்மையை கண்டறிய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
மதுரை அருகேயுள்ள செக்கானூரணி காவல்நிலையத்தின் கழிவறையில் தேனியைச் சார்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன்என்பவர் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார் என்பது அதிர்ச்சியளிக்கிறது. இதன்பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிய வேண்டும். குற்றவாளிகள் தப்பிக்க இடமளிக்காமல் விரைந்து சட்டபூர்வமானநடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியிருப்பது வரவேற்க தக்கது. தொடர்புடையவர்களை இடைநீக்கம் செய்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.எனினும், காவல் மரணங்கள் அரசின் மீதான நம்பிக்கையைப் பாழ்படுத்தும் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும் அரசுவேலை வாய்ப்பும் வழங்கிட அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.