

வேட்டவலம்,
திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச் சாராயம் உற்பத்தி செய்பவர்களுக்கு எதிராக போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
இந்த வகையில் வேட்டவலம் பகுதியில் சாராயம் உற்பத்தி செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற சப்- இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான தனிப்பிரிவு போலீசார் சாராய ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள மலைப்பகுதியில் போலீசார் சோதனை செய்து போது, 8 பிளாஸ்டிக் பேரல்களில் பதுக்கி வைத்திருந்த 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அந்த சாராயங்களை கீழே கொட்டி அழித்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சாராயம் உற்பத்தி செய்தவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.