தமிழகத்தில் தேர்தல் பணியில் இருந்த போலீஸ் டி.எஸ்.பி., எஸ்.ஐ. உயிரிழப்பு

எஸ்.ஐ. கண்ணதாசன் நாகியம்பட்டி பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்தார்.
தமிழகத்தில் தேர்தல் பணியில் இருந்த போலீஸ் டி.எஸ்.பி., எஸ்.ஐ. உயிரிழப்பு
Published on

சென்னை,

போலீஸ் டி.எஸ்.பி.:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் போதைபொருள் தடுப்பு பிரிவு சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வந்த வர் ராமகிருஷ்ணன் (வயது 56). இவர் நேற்று மாலை திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடையக்கோட்டை வாக்குச்சாவடி பகுதிகளில் தேர்தல் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஒட்டன்சத்திரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராமகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எஸ்.ஐ. கண்ணதாசன்:-

சேலம் மாவட்டம் மல்லிகரை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன். இவர் கடந்த சில நாட்களாக தம்மம்பட்டி அருகே உள்ள நாகியம்பட்டி பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் நேற்று நாகியம்பட்டியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக் டர் கண்ணதாசன் பணியில் ஈடுபட்டார்.

அப்போது அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே கண்ணதாசன் பரிதாபமாக இறந்தார். இதய செயழிலப்பால் கண்ணதாசன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com