கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு

சங்கராபுரம் பகுதி கோவில்களில் திருட்டு குறித்து கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு
Published on

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள பாண்டலம் ஏரிக்கரை துர்க்கை அம்மன் கோவிலில் கடந்த சில நாட்களாக கோவில் மணிகள், குத்து விளக்கு, புது பூட்டுகள் ஆகியவற்றை மர்ம நபாகள் திருடிச் சென்றனர். இதே போல் சங்கராபுரம் பகுதியில் உள்ள வேறு சில கோவில்களிலும் திருட்டு நடந்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சம்பவம் நடந்து பல நாட்கள் ஆகியும் இதுவரை திருட்டு சம்பவம் தொடர்பாக யாரும் பிடிபடவில்லை. இந்த நிலையில் திருட்டு நடைபெற்ற கோவில் மற்றும் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அனைத்தும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போலீசார் ஆய்வு செய்து கோவில்களில் திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் இரவு நேர ரோந்து காவலை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com