வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த போலீஸ் ஏட்டு கைது

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த போலீஸ் ஏட்டு கைது
Published on

தூத்துக்குடி,

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டுள்ளார். திருச்செந்தூரை சேர்ந்த கற்குவேல், 2017-ல் காவல்துறை பணிக்கு தேர்வானார்.

ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்த கற்குவேல் தொடர்ந்து இரவுப் பணியில் ஆர்வம் காட்டினார். இரவில் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.

நெல்லை மாநகர், பெருமாள் புரத்தில் நடைபெற்ற கொள்ளையில் தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இதில் கைரேகை தடயம் மூலம் ஏட்டு கற்குவேல் சிக்கினார். வேலியே பயிரை மேய்ந்த கதையாக அமைந்துள்ள இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com