சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

போலீஸ் கமிஷனர் அருண் நேற்று இரவு உத்தரவு பிறப்பித்தார்.
சென்னை,
சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்களை மாற்றி போலீஸ் கமிஷனர் அருண் நேற்று இரவு உத்தரவு பிறப்பித்தார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுதாகர் காசிமேடு மீன்பிடி துறைமுகம் சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்னொரு இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் தலைமை செயலக காலனி சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கும் மாற்றப்பட்டனர். இன்ஸ்பெக்டர் பென்சாம்டி.பி.சத்திரம் சட்டம்-ஒழுங்கு பிரிவில் பதவியேற்பார்.
மாம்பலம் சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு விமல் நியமிக்கப்பட்டார். ரஜினிகாந்த் கொடுங்கையூருக்கும், டி.சரவணன் புழலுக்கும், இளங்கோவன் வியாசர்பாடிக்கும் சட்டம்-ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story






