இலங்கையில் இருந்து மண்டபம் முகாமுக்கு வந்த அகதியிடம் போலீசார் விசாரணை

இலங்கையில் இருந்து மண்டபம் முகாமுக்கு வந்த அகதியிடம் போலீசார் விசாரணை
இலங்கையில் இருந்து மண்டபம் முகாமுக்கு வந்த அகதியிடம் போலீசார் விசாரணை
Published on

ராமேசுவரம்,

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் அங்கு மக்கள் வாழ முடியாமல் பல்வேறு கஷ்டங்களை சந்தித்து வருகின்றனர். இதனால் அவ்வப்போது அங்கிருந்து கள்ளத்தனமாக படகு மூலம் தமிழகத்திற்கு அகதிகள் வருவது தொடர்கின்றது.

இந்த நிலையில் இலங்கை மன்னார் மாவட்டம் முருங்கன் பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் (வயது 38) என்பவர் நேற்று முன்தினம் இரவு மன்னார் பகுதியில் இருந்து ஒரு பிளாஸ்டிக் படகில் வந்துள்ளார். அவரை நேற்று அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் இலங்கை படகோட்டிகள் இறக்கிவிட்டு மீண்டும் இலங்கை சென்று விட்டனர். வசந்தகுமார் நேராக அங்கிருந்து வாகனம் ஒன்றில் ஏறி ராமேசுவரம் வந்து அங்கிருந்து பஸ்சில் ஏறி மண்டபம் அகதிகள் முகாமுக்கு நேரடியாக சென்று விட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலோர போலீசார் மற்றும் மத்திய மாநில உளவு போலீசாரும் இலங்கை அகதியிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com