மதுபான பார் ஊழியருக்கு அரிவாள் வெட்டு: போலீஸ் விசாரணை

நெல்லை மாநகரம், ரெட்டியார்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் ரெட்டியார்பட்டி அருகில் மதுபான பாரில் பணிபுரிந்து வருகிறார்.
மதுபான பார் ஊழியருக்கு அரிவாள் வெட்டு: போலீஸ் விசாரணை
Published on

திருநெல்வேலி மாநகரம், ரெட்டியார்பட்டி முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயபாலன் மகன் தளவாய்பாண்டி (வயது 31) என்பவர், பெருமாள்புரம், ரெட்டியார்பட்டி அருகில் மதுபான பாரில் பணிபுரிந்து வருகிறார்.

அந்த மதுபான பாருக்கு மது அருந்த வந்த முத்தூர் பகுதியை சேர்ந்த பேச்சுமுத்து(37), காளிமுத்து, பொன்னுரங்கம், நெல்லையப்பன் மற்றும் சூர்யா ஆகியோர் சேர்ந்து ரூ.1,000 பணத்தை கூகுள்பே மூலம் அனுப்புவதில் ஏற்பட்ட வாய் தகராறில் அவதூறு வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தி, தளவாய்பாண்டி மற்றும் சந்திரன் ஆகியோரை அரிவாளால் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் தளவாய்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் பெருமாள்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com