விக்கிரவாண்டி அருகே தொழிலாளி திடீர் சாவு போலீசார் விசாரணை

விக்கிரவாண்டி அருகே தொழிலாளி உயிழந்தா. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா.
விக்கிரவாண்டி அருகே தொழிலாளி திடீர் சாவு போலீசார் விசாரணை
Published on

விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி அடுத்த தென்னவராயன்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையன்(வயது 65), கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை சிவா என்பவரது நிலத்தில் புல் அறுக்க சென்றார். பின்னர் அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை தேடி சென்றனர். அப்போது அவர், வயலில் இறந்த நிலையில் கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்ணையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி கண்ணையன் மகன் ராஜா விக்கிரவாண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது தந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணையன் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com