ஆன்லைன் மூலம் கடன் கொடுத்தவர்கள் மிரட்டல்-சைபர் கிரைம் போலீசார் விசாரணை

ஆன்லைன் மூலம் கடன் கொடுத்தவர்கள் மிரட்டியது பற்றி சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஆன்லைன் மூலம் கடன் கொடுத்தவர்கள் மிரட்டல்-சைபர் கிரைம் போலீசார் விசாரணை
Published on

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்த ஒருவர் முகநூலில் வந்த கடன் வழங்கப்படும் என்ற விளம்பரத்தை பார்த்து ரூ.5 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். கடன் வாங்கும்போது, அவருடைய குடும்ப படம் மற்றும் விவரங்களையும் கொடுத்துள்ளார். மேலும் இந்த தொகைக்கு ரூ.6,500 வரை கட்டியுள்ளார்.

இந்த நிலையில் அவரது செல்போனில் பேசிய ஒருவர் இந்த கடன் தொகையை இன்னும் செலுத்தவில்லை. கடனை கொடுக்காவிட்டால் அவரது மனைவியை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியிடுவோம் என்று மிரட்டியுள்ளார். இதுகுறித்து அவர் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் புகார் செய்தார். அதன்பேரில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் போனில் மிரட்டியவர்கள் பீகாரில் இருந்து பேசியது தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com