உல்லாசத்திற்கு அடிக்கடி அழைத்த பெண்..ஒக்கேனக்கல் அழைத்து சென்று கள்ளக்காதலன் செய்த செயல்

புஷ்பராணி அடிக்கடி மகேந்திரனை உல்லாசத்துக்கு வருமாறு அழைத்துள்ளார்.
உல்லாசத்திற்கு அடிக்கடி அழைத்த பெண்..ஒக்கேனக்கல் அழைத்து சென்று கள்ளக்காதலன் செய்த செயல்
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கோபி பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் வடிவேல். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். அவருடைய மனைவி புஷ்பராணி (வயது 43). இவர் வேட்டைகாரன்கோவிலில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி வேலைக்கு சென்ற புஷ் பராணி வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து கோபி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த னர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாய மான புஷ்பராணியை தேடி வந்தனர். இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே உள்ள பெரும்பாலை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தொப்பையாறு என்ற இடத்தில் ஒரு பெண் பிணமாக கிடப்பதாக ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று பிணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த பெண் கோபியில் மாயமான புஷ்பராணி என்பதும், அவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து கோபி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

புஷ்பராணியின் செல்போனுக்கு வந்த பல்வேறு அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கவுந்தப்பாடி ஆலத்தூர் ஜீவா நகர் சூளைமேட்டை சேர்ந்த மணி என்பவருடைய மகன் மகேந்திரன் (32) அடிக்கடி புஷ்பராணியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சந்தேகத்தின்பேரில் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையத்தை சேர்ந்த தனது அக்காள் கணவர் சதீஷ் (35) என்பவருடன் சேர்ந்து புஷ்பராணியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து மகேந்திரனிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த பரபரப்பு தகவல்கள் வருமாறு:-

புஷ்பராணி வேலை செய்த நிறுவனத்தில் மகேந்திரனும் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கடந்த 3 ஆண்டுகளாக 2 பேரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஆனால் புஷ்பராணி அடிக்கடி மகேந்திரனை உல்லாசத்துக்கு வருமாறு அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் தகாத உறவு குறித்து மகேந்திரனின் மனைவியிடம் கூறி விடுவதாக புஷ்பராணி மிரட்டி வந்துள்ளார்.

இதுகுறித்து சதீசிடம் மகேந்திரன் தெரிவித்துள்ளார். பின்னர் 2 பேரும் சேர்ந்து புஷ்பராணியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனால் மகேந்திரன் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி புஷ்பராணியை கடந்த 25-ந் தேதி காரில் ஒகேனக்கல் அழைத்து சென்றுள்ளார். உடன் சதீசும் சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து 3 பேரும் சேலம் மாவட்டம் பூலாம்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்குட் பட்ட காட்டூர் கருப்பராயன் கோவில் அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு வைத்து புஷ்பராணியிடம் தன்னை மறந்துவிடுமாறு மகேந்திரன் கூறியுள்ளார். அதற்கு அவர் முடியாது என்று மறுத்துள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் தாங்கள் தயாராக வைத்திருந்த கட்டுக்கம்பியால் புஷ்ப ராணியின் கழுத்தை இறுக்கியுள்ளனர். இதில் அவர் உயிரிழந்தார். பின்னர் அவருடைய பிணத்தை காரில் எடுத்து சென்று பெரும்பாலை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தொப் பையாறு என்ற இடத்தில் வீசிவிட்டு தப்பித்து சென்று தலைமறைவாக இருந்து வந்தனர். இந்த நிலையில் புஷ்பராணியின் செல்போனில் பதிவான அழைப்புகளால் அவர்கள் சிக்கி உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com