வாக்குச்சாவடிக்குள் போலீஸ் நுழையக்கூடாது: டிஜிபி

காவலர்கள் வாக்குச்சாவடியின் வெளிக்கதவு அருகிலேயே நின்று கடமையாற்ற வேண்டும் என்று டிஜிபி தெரிவித்துள்ளார்.
வாக்குச்சாவடிக்குள் போலீஸ் நுழையக்கூடாது:  டிஜிபி
Published on

தமிழக டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் மிக முக்கிய உத்தரவு ஒன்றை போலீசாருக்கு பிறப்பித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: காவலர்கள் வாக்குச்சாவடிக்குள் அனுமதியின்றி நுழையக்கூடாது .வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் அனுமதி இருந்தால் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும்.

காவலர்கள் வாக்குச்சாவடியின் வெளிக்கதவு அருகிலேயே நின்று கடமையாற்ற வேண்டும் விதிகளை காவலர்கள் கண்டிப்பாக பின்பற்ற எஸ்பிக்கள், காவல் ஆணையர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த பிரச்சினையும் இல்லாமல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது” என்று டிஜிபி தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், டிஜிபியின் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com