பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த கொழுந்தனுக்கு போலீஸ் வலைவீச்சு

திருவள்ளூரில் ஒரு வாலிபர், தனது மனைவி கர்ப்பமாக உள்ளதை கிண்டல் செய்த அண்ணியை கத்தியால் சரமாரியாக குத்தினார்.
பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த கொழுந்தனுக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

திருவள்ளூர் அருகே உள்ள இருளஞ்சேரி கிராமம் கலைஞர் நகரை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி சாந்தி (வயது 26). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இளையராஜாவின் தம்பி இசைமேகத்துக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது அவரது மனைவி கர்ப்பமாக உள்ளார். இதுபற்றி சாந்தி கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இசைமேகம், சாந்தியை கத்தியால் சரமாரியாக குத்தினார்.

இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய அவரை வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலன் இல்லாமல் சாந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கொழுந்தன் இசைமேகத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com