மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

தப்பி ஓடிய வாலிபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
சென்னை,
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி மாதவரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். தனியாக வசித்து வரும் அவர், கடந்த 17-ந் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவர், வீடு புகுந்து மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி சத்தம் போடவே அங்கிருந்து வாலிபர் தப்பிச் சென்றுவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபரை வலை வீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story






