பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: தப்பி ஓட முயன்ற குற்றவாளிகள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு

கிருஷ்ணகிரியில் போலீசாரை தாக்கி விட்டுத் தப்ப முயன்ற குற்றவாளிகளை துப்பாக்கி சூடு நடத்தி போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: தப்பி ஓட முயன்ற குற்றவாளிகள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு
Published on

கிருஷ்ணகிரியில் மலைப்பகுதியில் கூலி வேலைக்கு சென்ற பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வழிப்பறியில் ஈடுபட்ட 4 போதை இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், தலைமறைவாக இருந்த மேலும் இருவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில், இன்று பொன்மலைகுட்டை பெருமாள் கோவில் பின்புறம் 2 பேர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர். அப்போது குற்றவாளிகள் கத்தியால் தாக்கியதில் 2 போலீசார் காயமடைந்தனர்.

பின்னர் தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் சுரேஷ் என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. தப்பி செல்ல முயன்ற நாராயணனுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் ஆய்வு செய்தார். துப்பாக்கி சூடு நடைபெற்றதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com