போலீஸ் அணிவகுப்பு

விநாயகர் சதுர்த்தியையொட்டி நெல்லையில் போலீஸ் அணிவகுப்பு
போலீஸ் அணிவகுப்பு
Published on

விநாயகர் சதுர்த்தி இன்று (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி நெல்லை மாநகர பகுதிகளில் 120-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. வருகிற 4-ந்தேதி அனைத்து விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தாமிரபரணி ஆற்றில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக மாநகர் பகுதி முழுவதும் போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் தலைமையில் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்படும் சாலைகளில் போலீசார் பாதுகாப்பு கொடி அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி நேற்று நெல்லை டவுன் ஆர்ச் முன்பிருந்து போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கவச உடையணிந்து கொடி அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். ஆர்ச் முன்பு தொடங்கிய அணிவகுப்பு நெல்லை பாரதியார் தெரு, வ.உ.சி. தெரு வழியாக 4 ரத வீதிகள் வழியாக சென்று நெல்லையப்பர் கோவில் முன்பு முடிவடைந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com