கம்பம் கடை வீதிகளில் போலீசார் கண்காணிப்பு

தீபாவளியை முன்னிட்டு, கம்பம் கடைவீதிகளில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கம்பம் கடை வீதிகளில் போலீசார் கண்காணிப்பு
Published on

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கம்பம் பகுதியில் உள்ள பட்டாசு கடை, மளிகை கடை, ஜவுளிக்கடை மற்றும் பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டநெரிசலை பயன்படுத்தி பொதுமக்களிடம் நகை, பணம், செல்போன்களை திருடுவதற்கு சிலர் வலம் வருவார்கள்.

இதனை தடுக்கும் வகையில் கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா தலைமையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக கம்பத்தில் முக்கிய கடைவீதிகளான அரசமரம் பிரிவு, வேலப்பர் கோவில் தெரு, எல்.எப் மெயின் ரோடு, காந்தி சிலை, பார்க் ரோடு உள்ளிட்ட இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வேலப்பர் கோவில், அரசமரம் பிரிவு ஆகிய பகுதியில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்தபடியே போலீசார் கண்காணித்து, சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com