

வடலூர்
வடலூர் அருகே வயல்வெளி பகுதியில் ஏராளமான மயில்கள் காணப்படுகின்றன. தற்போது கோடை காலமாக இருப்பதால் தாகம் தணிப்பதற்காக தண்ணீரை தேடி கோட்டக்கரை பகுதிக்கு வந்து செல்கின்றன. அப்படி தண்ணீரை தேடி வந்த மயில் ஒன்று அங்குள்ள மின் கம்பத்தில் சிக்கி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே செத்தது.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து வடலூர் போலீஸ் நிலையத்திற்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வடலூர் போலீசார் செத்து கிடந்த மயிலின் உடலில் தேசியக்கொடியை போர்த்தி மரியாதை செலுத்தினர். பின்னர் அந்த மயிலின் உடலை வனத்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.