போலீசார் சமாதானம்

போலீசார் சமாதானம்
Published on

ஆத்தூர்

ஆத்தூர் கடைவீதி கரிகாலன் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகன் தினேஷ் குமார் (வயது 28). இவரும், ஆத்தூர் கிரேன் பஜார் பகுதியை சேர்ந்த பரமசிவம் என்பவரின் மகள் ரம்யா (20) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், நேற்று காலை அவர்கள் இருவரும் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி ஆத்தூர் அருகே உள்ள புத்திர கவுண்டன் பாளையம் முத்துமலை முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அந்த காதல் ஜோடி தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு ஆத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தது. இதையடுத்து இரு தரப்பு பெற்றோரையும் அழைத்து போலீசார் சமாதானம் செய்து காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com